முதலில் விஜய்யை களத்திற்கு வர சொல்லுங்கள், மேடையில் பேசுவது எல்லாம் பஞ்ச் டயலாக் வசனங்கள் என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய்யை போல் எனக்கும் கூட்டம் கூடும். எந்த கட்சி அழைத்தாலும் விஜய்யை எதிர்த்து அவர் தொகுதியில் போட்டியிடுவேன். எனக்கும் ரசிகர்கள் உள்ளனர், விஜய்யை போல் எனக்கும் கூட்டம் கூடும் என கடுமையாக விஜய்யை சாடியுள்ளார்.