சென்னை: ஆபத்தான பள்ளம்.. அச்சத்தில் மக்கள்

73பார்த்தது
சென்னை: ஆபத்தான பள்ளம்.. அச்சத்தில் மக்கள்
கோட்டூர்புரம், காந்தி மண்டபம் சாலை, ஆங்காங்கே பெயர்ந்து பள்ளமாக காணப்பட்டது. இதையடுத்து மாநகராட்சியினர், செம்மண் கொட்டி, பள்ளத்தை சீரமைத்தனர். இந்நிலையில் இரு நாட்களாக மழை பெய்ததால், சீரமைக்கப்பட்ட இடங்கள், மேடும் பள்ளமுமாக மாறியுள்ளன. இதனால், இரவு நேரத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர், சகதியில் சறுக்கி, விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. உயிரிழப்பு ஏற்படும் முன், சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புழுதிவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாய் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது. ஆனால், இணைப்புக்காக, சில பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை.

தொடர்புடைய செய்தி