டங்ஸ்டன் சுரங்கம் அமைய உறுதுணையாக இருந்துவிட்டு மக்கள் எதிர்ப்புக்கு பின் முதல்வர் மு.க. ஸ்டாலின் கபடநாடகம் ஆடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாபட்டி மற்றும் நாயக்கர்பட்டி பகுதிகளில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அரசின் சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் விளக்கக் குறிப்பு திமுக அரசின் இரட்டை வேடமுகத்தையை கிழிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, பல்லுயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தமிழர்களின் பண்டைய கால வரலாற்றையும் அழிக்கும் வகையிலான டங்ஸ்டன் திட்டத்திற்கான அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில், மக்கள் விரும்பாத இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு பிள்ளையார்சுழி போட்டு மாபெரும் துரோகம் இழைத்த திமுக அரசும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் மதுரை மாவட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.