சென்னை: தமிழகம் முழுவதும் 20 சார்பதிவாளர்களை இடமாற்றம் செய்து பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நிர்வாக காரணம் அடிப்படையில், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி மண்டலங்களை சேர்ந்த, 20 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவுகளை, அந்தந்த மண்டல டி. ஐ. ஜிக்கள் பரிந்துரை அடிப்படையில், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.