சென்னை: தெரு நாய்களை தத்தெடுக்க கோரி பொதுமக்களுக்கு மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
சென்னை செனாய் நகரில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் மாநகராட்சி சார்பில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதை மாநகராட்சி கமிஷனர்.
அப்போது அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சியில், கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 56 ஆயிரத்து 179 நாய்கள் இருந்தன.
தற்போது அது ஒன்றரை லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் தாமாக முன்வந்து நாய்களை தத்து எடுத்தால் மட்டுமே அவைகளால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க முடியும்.