சென்னை: புதிதாக 1, 475 பேருந்துகள் கொள்முதல்..

72பார்த்தது
சென்னை: புதிதாக 1, 475 பேருந்துகள் கொள்முதல்..
புதிதாக 1, 475 பேருந்துகளின் அடிச்சட்டம் தயாரித்து வழங்க அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவுப்படியும், போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 2024-25 நிதி ஆண்டுக்கு 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.

முதற்கட்டமாக 453 பேருந்துகளுக்கு கடந்த ஜூலை 18-ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டு, அதில் 371 பேருந்துகள், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள 82 பேருந்துகள் வரும் டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்நிலையில், ரூ. 341 கோடி மதிப்பீட்டில், 1, 475 பேருந்து அடிச்சட்டங்களுக்கான பணி ஆணை அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு நேற்று(நவம்பர் 22) வழங்கப்பட்டது. இந்த அடிச்சட்டங்கள் கூண்டு கட்டி, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி