நானும் புதிய கட்சிதான். அதனால் புதிய கட்சிகளை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய கமல், அங்கே நமது மையத்தின் குரல் ஒழிக்க வேண்டும். பாரபட்சம் இல்லாத தமிழ்நாட்டு மக்களுக்கான குரலாக அது இருக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து நடிகர் விஜய்யின் தவெக கட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, நானும் புதிய கட்சிதான். அதனால் புதிய கட்சிகளை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என கூறினார்.