சென்னை: பாதயாத்திரைபக்தர்களின் பாதுகாப்பு; இந்து முன்னணி வலியுறுத்தல்

63பார்த்தது
சென்னை: பாதயாத்திரைபக்தர்களின் பாதுகாப்பு; இந்து முன்னணி வலியுறுத்தல்
பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தக்க ஏற்பாடுகளைச் செய்வதில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர் மீது அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 இது மிகுந்த கவலை அளிக்கும் விஷயம். பழனிக்கு பல லட்சம் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்வதுபோல திருச்செந்தூருக்கும் முருக பக்தர்கள் ராஜபாளையம், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பல ஊர்களில் இருந்து செல்கிறார்கள். திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி வழி ஏற்படுத்த திட்டம் செயல்படுத்த துவங்கி ஆண்டுகள் பல ஆன பின்னரும் அதனை இன்னும் நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது தமிழக அரசு. 

ஆனால் தமிழர்கள் தங்கள் தெய்வத்தை வழிபட சொந்த மாநிலத்தில் நடந்து செல்வதற்குத் கூட எந்த வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்வதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். பல நாட்கள் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும், குளிப்பதற்கும், ஓய்வு எடுக்கவும் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டியது அரசின் கடமை ஆகும் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி