பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2, 53, 954 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 1, 98, 853 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றினர். ஜூன் 12இல் ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜூன் 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியாகிறது.