சென்னை:
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் மனைவி கணக்கில் இருந்து ரூ. 99ஆயிரம் மோசடி செய்துள்ளதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மனைவியின் செல்போன் எண்ணிற்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஆக்சிஸ் வங்கியில் இருந்து பேசுவது போல், இந்தியில் பேசி ரூ. 99ஆயிரம் மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.