அரசுப் பள்ளிகளில் நாளை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் நலனுக்காக நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், பெற்றோர் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.