சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் வருகையை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சென்னை மெட்ரோ ரயில்களில் 95.35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் 20% தள்ளுபடி வழங்குகிறது. மெட்ரோ பயன அட்டை, மொபைல் க்யூ.ஆர். குறியீடு டிக்கெட், சிங்கிள், ரிட்டன், குழு டிக்கெட்டுகள் மற்றும் கியூ.ஆர் பயண பாஸ்கள், வாட்ஸ் அப், பே டி.எம் மற்றும் போன் பே என பயணிகளுக்கு வசதியாக பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.