தமிழகம் முழுவதும் 4500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், தலைமை ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த அவர், அந்தப் பணிகளை பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வதால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.