தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறையை சிவ. வீ. மெய்யநாதன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு தொடங்கி வைத்து உரையாற்றுகையில் தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் எவ்வாறு முன்னோடி மாநிலமாகச் செயல்படுகிறது எனவும், கட்டிட இடிமானக் கழிவுகளை எவ்வாறு மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் உரையாற்றினார்.
இக்கருத்துப்பட்டறையில் சுற்றுலாத் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீ நிவாஸ் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.