விரைவில் ஏ.சி வசதியுடன் சென்னை புறநகர் ரயில் அறிமுகம்

68பார்த்தது
விரைவில் ஏ.சி வசதியுடன் சென்னை புறநகர் ரயில் அறிமுகம்
மும்பை புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி வசதியுடன் கூடிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்படுகின்றன. மும்பை போலவே சென்னைக்கும் நடப்பு நிதியாண்டில் குளிரூட்டப்பட்ட புறநகர் மின்சார ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலை தயாரிக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஆலையில் நடைபெற்று முடிந்துள்ளன. சோதனை ஓட்டம் முடிந்த பின் எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து ரயில்வே முடிவு செய்து அறிவிக்கும்.

தொடர்புடைய செய்தி