சென்னையில் 2 நாட்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவுப் பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இதுகுறித்து உதயநிதி கூறுகையில், "ஃபார்முலா 4 கார் பந்தயம் மூலம் சென்னைக்கு பெருமை கிடைத்துள்ளது என நம்புகிறேன். இந்த பந்தயம் முதன்முறையாக நடைபெற்றதால் சில தாமதங்கள் ஏற்பட்டன. அடுத்த வருடம் கார் பந்தயம் நடத்துவது குறித்த சாதக பாதகங்களை ஆய்வு செய்து முதலமைச்சரின் ஆலோசனைக்கு பிறகு அறிவிப்போம்" என்றார்.