"சென்னை பொண்ணுக்கு காதலிக்க மதுரை பையன் தேவை” என்ற வாசகங்களுடன் சென்னையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பின்குறிப்பு: “அப்ளை செய்தால் ஆஹான்னு ஆச்சரியப்படுத்துகிற பரிசு காத்திருக்கிறது". அப்ளை செய்ய ஸ்கேன் செய்யுங்கள் என்று அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையாகவே மாப்பிள்ளை தேடும் படலமா அல்லது வேறு ஏதேனும் விளம்பரமா என்பது குறித்து எந்த விவரமும் இல்லை. என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.