7 பள்ளி மாணவிகள் மீது ரசாயன பொடி வீச்சு.. 4 பேர் கவலைக்கிடம்

59பார்த்தது
7 பள்ளி மாணவிகள் மீது ரசாயன பொடி வீச்சு.. 4 பேர் கவலைக்கிடம்
கர்நாடகா: கடக் மாவட்டம் லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டத்தில் பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்குச் செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக வண்ணப்பொடியை வீசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்ததாக கூறப்படும் நிலையில், 7 மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமானதை அடுத்து, மேல் சிகிச்சைக்காக GIMS மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி