சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நாளை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள நீர் வரத்து காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை காலை (அக்.8) 10 மணியளவில், விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர், வெள்ள நீர் போக்கி வழியாக திறக்கப்படவுள்ளது. மேலும், ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் அருகே அமைந்துள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி அறிக்கை வெளியிட்டுள்ளார்.