யூடியூபர் சவுக்கு சங்கர் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று (டிச. 17) அவரை கைது செய்தனர். இன்று (டிச. 18) அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவர் சிரித்த முகத்துடன் டாடா காட்டியபடியே சென்றார்.