முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பள்ளிகள் திறப்பான ஜூன் 2ஆம் தேதி பொங்கல், காய்கறி சாம்பார் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரிசி உப்புமா வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டு, வாரத்தில் இரு தினங்கள் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் பொங்கல் வழங்கப்படவுள்ளது. அதேபோல் திங்கட்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த கோதுமை ரவை உப்புமா இனி வியாழக்கிழமைகளில் வழங்கப்படும் எனவும் சமூக நலத்துறை அறிவித்துள்ளது.