OMR விடைத்தாளில் சில மாற்றங்களை செய்து புதிய நடைமுறையை TNPSC அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது www.tnpsc.gov.in - "OMR Answer Sheet - Sample" என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் நிரப்புவது தொடர்பாகவும், கண்காணிப்பாளரின் கையொப்பம் தொடர்பாகவும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.