தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று (மார்ச்.19) முதல் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வரும் 22, 23 ஆகிய தேதிகளில் சற்று குறையக்கூடும்.