தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி, தி.மலை, விழுப்புரம், செங்கல்பட்டு, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், சென்னை, தேனி, தென்காசி, குமரி மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.