9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

67பார்த்தது
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அக்னி நட்சத்திர வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பலரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மேலும், ஒரு சில பகுதிகளில் மழை பெய்து, வெயிலின் தாக்கத்தை குறைத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று(மே 8) 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி