தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவ.25, 26,27 மற்றும் 28-ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.