சாதி, மதம் இல்லை என சான்றிதழ்.. தமிழக அரசுக்கு பரிந்துரை

52பார்த்தது
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்.. தமிழக அரசுக்கு பரிந்துரை
திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த மேல்முறையீட்டு மனு இன்று (ஜூன். 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு சாதி மற்றும் மதம் அற்றவர் என்ற சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

தொடர்புடைய செய்தி