வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் கூறியதாவது, “குளிர்கால (ரபி) பயிர்களின் மகசூல் எதிர்பார்ப்பைவிட அதிகரித்துள்ளது. இதையொட்டி மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் வெங்காய விலை குறிப்பிட்டத்தக்க அளவில் சரிந்துள்ளது. எனவே வெங்காயம் ஏற்றுமதி மீதான 20% வரி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.