ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பான நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் - இஸ்ரேல் நாடுகள் போரில் பொறுமை காக்கவும் இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.