தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில் 50 விசைப்படகுகள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஒரு விசைப்படகிற்கு, ரூ.1.20 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு, அரசு சார்பில், 60 விழுக்காடு மானியம் வழங்கப்படும். இதில் பயனாளிகள், 40 விழுக்காடு செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, பல புதிய விதிமுறைகளை அறிவித்து, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் விண்ணப்பங்களை நிராகரிப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.