தென்மேற்கு பருவமழையால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய நீர் வளத்துறையின் பரிந்துரையின்படி, அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொள்கிறது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.