உத்தர பிரதேசம்: காசியாபாத்தில் நேற்று (டிச. 23) பதிவான சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், நபர் ஒருவர் சாலையில் செல்போனை கையில் வைத்தபடி நடந்து செல்கிறார். அவர் அருகில் பைக்கில் வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை அவரிடம் இருந்து பறித்து செல்வது பதிவாகியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில், குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.