கோவை அருகே பெண்களின் உள்ளாடைகளை திருடும் நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கண்ணம்பாளையத்தில் உள்ள வீடுகளில் காயப்போட்டிருந்த உள்ளாடைகள் உள்ளிட்ட துணிகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீட்டின் சிசிடிவியை ஆராய்ந்தபோது ஒருவர் சுவர் ஏறிக்குதித்து உள்ளே வந்து உள்ளாடைகளை திருடுவது தெரிந்தது. இதையடுத்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரை தேடி வருகின்றனர்.