சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 13) திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.65 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்வில் 91%க்கும் அதிகமான பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் தேர்வெழுதிய நுழைவு சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.