மேற்கு வங்கத்தில் நடந்த நகராட்சி ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பாக கொல்கத்தா மேயரும் திரிணாமுல்
காங்கிரஸ் தலைவருமான ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் திரிணாமுல்
காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா ஆகியோரின் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தியது. மத்திய புலனாய்வு அமைப்பின் குழு இன்று காலை ஹக்கீமின் தெற்கு கொல்கத்தா வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சிபிஐ சோதனை காரணமாக ஹக்கீமின் ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு வெளியே கூடி, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.