பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். ”பஹல்காம் தாக்குதலுக்கு கூட்டத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்றார். கடந்த 2011-ல் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.