நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டு மார்ச்சில் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுக்கின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2026 அக்டோபர் 1 அன்று உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பனி சூழ்ந்த மாநிலங்களில் முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மார்ச் 1, 2027 முதல் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.