“ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். மக்களின் விருப்பத்திற்கு ஆட்சியாளர்கள் தலைவணங்கியே தீர வேண்டும். எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும். நாம் கொடுக்கும் அழுத்தம் ஆட்சியாளர்களை அசைத்துப் பார்க்கும். அதன் பயனாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சமூகநீதி பாதுகாக்கப்படுவதை அனைத்து சமுதாயங்களும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.