இசை கச்சேரியில் கொட்டிய பண மழை (வீடியோ)

994பார்த்தது
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நாட்டுப்புற இசைக் கச்சேரியில் ரசிகர்கள் பணத்தை மழையாக பொழிந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. வட மாநிலங்களில் நாட்டுப்புற இசைக் கச்சேரிகள் வெகு பிரபலம். அந்தவகையில், அகமதாபாத்தில் சனிக்கிழமையன்று நாட்டுப்புறக் கலைஞர் மாயாபாய் அஹிர் மற்றும் நாட்டுப்புற பாடகி அல்பா படேல் ஆகியோர் நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது இவர்களின் பாடலை ரசித்து கேட்ட ரசிகர்கள் இவர்கள் மீது பணத்தை வாரி வீசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி