கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான 'One8 Commune' உணவகம் மீது கர்நாடகா காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகைபிடிப்பதற்கு தனியாக இடம் ஒதுக்காததால் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது, புகைபிடிக்க தனியாக இடம் ஒதுக்காதது போன்றவைக்கு அபராதம் விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.