கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டூரில் நேற்று தொண்டர்கள் புடைசூழ காரில் ஏறி நின்றபடி ஜெகன் கையசைத்துக்கொண்டே சென்றார். தொண்டர்களின் கூட்டநெரிசல் காரணமாக அதில் ஒருவர் தவறி விழுந்ததில் அவரது தலை மீது கார் சக்கரம் ஏறியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஜெகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் ரமண ரெட்டி கைது செய்யப்பட்டார்.