தெலங்கானாவை சேர்ந்த பிரபல பாடகி மங்லி, அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன் 11) அதிகாலை, நண்பர்களுக்கு மதுபான விருந்து வைத்துள்ளார். இதில் சட்டவிரோத போதை பொருட்கள் பயன்படுத்தியதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சோதனை செய்ததில் போதை பொருட்கள் பயன்படுத்தியது உறுதியானது. தொடர்ந்து கஞ்சா, மதுபானங்கள் உள்ளிட்டவற்றை காவலர்கள் பறிமுதல் செய்து, மங்லி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.