கோவை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநராக இருந்த போது, மோசடி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக பிரமுகரான ஆற்றல் அசோக் குமார், பள்ளிக்கு 45 பேருந்துகளை கூடுதல் விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக தற்போதைய பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆற்றல் அசோக் குமார் பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றல் அசோக் குமார் மனைவி கருணாம்பிகா குமார் (54) நேற்று உடல்நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் காலமானார்.