இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி பெங்களூருவில் அமைந்துள்ளது. One8 Commune என்ற பெயர் கொண்ட அந்த மதுபான விடுதி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகைப்பிடிக்க தனி இடம் இல்லை என கூறி சிகரெட் மற்றும் புகையிலை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு தீவிபத்து தொடர்பான பாதுகாப்பு ஒப்புதல் இல்லாததால் இந்த விடுதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.