கேரளாவுக்கு அடுத்தபடியாக ஏலக்காய் உற்பத்தியில் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகள் முன்னிலையில் உள்ளது. தற்போது ஏலக்காய் விலை உயர்ந்திருப்பதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏலக்காய் அறுவடை காலம் துவங்கியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை கிலோ ரூ.3,300 வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு விளைச்சல் குறைவாக இருந்தாலும், கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வால் நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.