கோவை: மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் பைக் வருவதை கவனிக்காமல் கார் ஒன்று திரும்பியது. அப்போது பைக் அதிவேகமாக வந்ததால் ஓட்டுநரால் நிறுத்த முடியவில்லை. இதையடுத்து கார் மீது வேகமாக மோதியதில் பைக்கில் இருந்த 2 இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.