திண்டுக்கல் மாவட்டத்தில் காரின் டயர் வெடித்த விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் அருகே சாலையில் வேகமாக சென்ற காரின் டயர் திடீரென வெடித்து, அருகே இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த ஒரே 12 சிறுவன் உயிரிழந்தார். மேலும், சிறுவனின் தாய், 2 சகோதரர்கள் படுகாயமடைந்தனர். காரை ஓட்டிய சிறுவனின் தந்தை காயங்கள் ஏதுமின்றி தப்பினார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.