சென்னை மெரினா கடற்கரை சாலையில் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக காரை ஓட்டிய புகாரில் ஐடி ஊழியர் அபிஷேக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியில் இருந்த காவலர் செல்வம் கொடுத்த புகாரின்பேரில், சம்மன் வழங்கி இன்று காலை 10 மணிக்கு ஓட்டுநர் உரிமம், அசல் ஆவணங்கள், காருடன் காவல் நிலையத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தான் நன்றாக கார் ஓட்டுவதாக மனைவி, நண்பர்கள் கூறியதால் அதிவேகமாக காரை ஓட்டியதாக அபிஷேக் தெரிவித்துள்ளார்.