சில நேரங்களில் அவசர முடிவுகள் எதிர்பாராத இழப்புகளுக்கு வழிவகுக்கும். இந்நிலையில், வெள்ள நீரில் ஒருவர் காரை ஓட்ட முயன்றார். ஆனால் கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. காரில் இருந்த சிலர் வெள்ள நீரில் குதித்து மிகுந்த சிரமத்துடன் கரையை அடைந்தனர். மற்றொரு நபர் காரில் இருந்துள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.