சென்னை - தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த 5 பேரும் உள்ளே சிக்கிய நிலையில் அவர்கள் கிரேன் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே மெட்ரோ ரயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் அதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், சாலையின் கீழேச் செல்லும் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே பள்ளம் ஏற்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.